வேலூரில் சாலை அமைக்கக் கோரி மக்கள் போராட்டம்!
வேலூர் , ஏப் 08 -
வேலூர் காகிதப்பட்டறை மேலாண்டை தெரு, செல்லியம்மன் கோயில் தெரு பகுதிகளில் சாலை அமைக்காததை கண்டித்து அப்பகுதி மக்கள் இன்று காலை வேலூர் ஆற்காடு சாலையில் சாலை திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த வடக்கு காவல் நிலைய போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தையை அடுத்து மறியலை கைவிட்டனர். சாலை மறியல் போராட்டத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக