பொள்ளாச்சியில் இன்று தேசிய திருநங்கையர் தினம் - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

புதன், 16 ஏப்ரல், 2025

பொள்ளாச்சியில் இன்று தேசிய திருநங்கையர் தினம்

IMG-20250416-WA0294

பொள்ளாச்சியில் இன்று தேசிய திருநங்கையர் தினம் கொண்டாடப்பட்டது.


 பொள்ளாச்சி நகராட்சியில் இன்று திருமதி. சியாமளா நவநீதகிருஷ்ணன், அவர்கள்  தலைமையில்,சகோதரி அறக்கட்டளை நிறுவனத் தலைவர் திருநங்கை அக்கா கல்கி Kalki Subramaniam அவர்களின் முன்னிலையில், தேசிய திருநங்கையர் தினம் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.


ஏராளமான திருநங்கை சகோதரிகள் கலந்து கொண்ட இந்நிகழ்வில் திருநங்கையர் சமூகம் வரும் காலங்களில்,கல்வி மற்றும் பொருளாதாரத்தில் உயர்ந்து சம உரிமை பெற்றிட மனதார வாழ்த்தினார்கள்...


இந்நிகழ்வில் நகர மன்ற துணைத் தலைவர் சகோதரர் எஸ்.கௌதமன், நகர மன்ற உறுப்பினர் ஸ்வீட் நாகராஜ்,சமூக ஆர்வலர் கிரீசன்,வார்டு செயலாளர் சகோதரர் போஜன் ஆகியோர் உடன் இருந்தனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் கலைவாணி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad