தமிழகத்தில் பிரதமர் மோடி வருவதை எதிர்த்து தஞ்சையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 6 ஏப்ரல், 2025

தமிழகத்தில் பிரதமர் மோடி வருவதை எதிர்த்து தஞ்சையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

IMG-20250406-WA0361

தமிழகத்தில்  பிரதமர் மோடி வருவதை எதிர்த்து தஞ்சையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பிரதமர் மோடி தமிழகம் வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினார்கள். அவரை திரும்பி போகும்படி வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள். 

தஞ்சாவூர் கீழவாசல் நால்ரோடு அருகில் அமைந்துள்ள  காமராஜர் சிலை  அருகே இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. வக்பு சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்றும், இந்தி மொழியை திணிக்க கூடாது என்றும் அவர்கள் வலியுறுத்தினார்கள்.


தொடர்ந்து தமிழகத்தை வஞ்சிக்கும்  மோடி அரசை வன்மையாக கண்டித்துகண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


தஞ்சாவூர் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் .பி.ஜி. இராஜேந்திரன்  தலைமையில் நடைபெற்றது. இதில் பொதுமக்கள், காங்கிரஸ் நிர்வாகிகள், தேசிய தோழர்கள் அனைவரும் கலந்து கொண்டு பாஜக அரசுக்கு எதிராக கோஷமிட்டனர். தஞ்சை மாவட்ட காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாவட்ட தலைவர் நாஞ்சி வரதராஜன் பொருளாளர் லட்சுமி நாராயணன் தஞ்சாவூர் தெற்கு மாவட்ட செயலாளர் 

வி.எஸ்.வீரப்பன் ,விவசாய பிரிவாணி தலைவர் ஜேம்ஸ் ஜெயபிரகாஷ் வயலூர் ராமநாதன் வழக்கறிஞர் பிரிவு ஜான்சன் செந்தில் சிவகுமார் சாரதா ராமதாஸ் சித்ராசாமிநாதன் ஆர் டி ஐ செல்வம் ஜேசு மகேந்திரன் ஸ்ரீதர் செல்வகுமார் மதியழகன் ராமமூர்த்தி நாகராஜன் திருவோணம் மேல மேட்டுப்பட்டி

முன்னாள் காவல்துறை உதவி ஆய்வாளர்  பெரி. சவுந்தரராஜன் உள்ளிட்ட  ஏராளமான காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad