திருப்பத்தூர் , ஏப் 09-
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியம் நத்தம் பஞ்சாயத்து உட்பட்ட மருதம்பட்டி கிராமத்தில் உள்ள விவசாயிகளின் கண்ணீர்குரல் சுந்தரம் பள்ளி மின்பகிர் மான துறைக்கு சம்பந்தப்பட்ட நாரவந்தம் பட்டி பகுதியில் பல ஏக்கர்கள் கொண்ட விவசாய நிலங்கள் உள்ளன இங்கு உள்ள விவசாயிகள் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள மின் இணைப்புகள் மின்மாற்றி மூலம் பயன்படுத்தி வருகின்றனர் இங்கு வைக்கப்பட்டுள்ள மின்மாற்றி ஆனது பலமுறை பழுதடைந் துள்ளது இதனை சம்பந்தப்பட்ட துறை மின் அதிகாரிகள் இவர்களிடமே குறிப்பிட்ட ஒரு தொகையைப் பெற்றுக் கொண்டு அதை மாற்றியும் தந்துள்ளனர் ஆனாலும் அது சரியாக பணி செய்யாத காரணத்தால் பலமுறை பழுதும் அடைந்துள்ளது இதனால் அப்பகுதி விவசாயிகள் தங்களுக்கு வேறொரு மின்மாற்றியை புதிதாக அமைத்து தர வேண்டுமென கோரிக்கை விடுத்துள் ளனர் இதை சம்பந்தப்பட்ட சுந்தரம் பள்ளி இளநிலை பொறியாளர் மற்றும் பொறியாளர் ஆகியோருக்கு தகவல் அளித்தும் முறைப்படி மனு அளித்தும் உள்ளனர் இதற்கு அவர்கள் மாற்றி தருகிறோம் எனக் கூறிவிட்டு இப்பொ ழுது ஏற்கனவே பழுதடைந்த மின்மாற்றி சரி செய்து தருகிறோம் என்று கூறி உள்ளனர், இதற்கு அப்பகுதி விவசாயி கள் சரி செய்து தந்தாலும் மீண்டும் ஏற்படும் மின்மாற்றில் பழுது ஏற்பட்டால் நாங்கள் என்ன செய்வது ஆகவே தங்கள் எங்களுக்கு கூறியது போல புதிய மின்மாற்றி அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்
திருப்பத்தூர் தாலுகா செய்தியாளர் மோ அண்ணாமலை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக