கன்னியாகுமரியில் ஒரே நாளில் இரு செயின் பறிப்பு முயற்சிகள் தோல்வி. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 6 ஏப்ரல், 2025

கன்னியாகுமரியில் ஒரே நாளில் இரு செயின் பறிப்பு முயற்சிகள் தோல்வி.

கன்னியாகுமரியில் ஒரே நாளில் இரு செயின் பறிப்பு முயற்சிகள் தோல்வி

கன்னியாகுமரி அருகே ஒரே நாளில் இரண்டு இடங்களில் மூதாட்டிகளை இலக்காகக் கொண்டு செயின் பறிக்க முயற்சித்த சம்பவங்கள் பதிவாகியுள்ளன. 

சுவாமிநாதபுரத்தை சேர்ந்த செல்லம்மாள் (75) இன்று காலை பால் வாங்கச் செல்லும் போது, பைக்கில் வந்த நபர் செயினை பறிக்க முயன்றார். செல்லம்மாள் செயினை இறுக்கமாக பிடித்ததால் முயற்சி தோல்வியடைந்தது. இதேபோல் ஏழுசாட்டுபத்து பகுதியில் மேலும் ஒரு மூதாட்டியிடமும் 9 பவுன் செயினை பறிக்க முயற்சி நடந்தது. 

ஆனால் அந்த மூதாட்டியின் சாமர்த்தியத்தால் அதுவும் தவிர்க்கப்பட்டது. போலீசார் இரு இடங்களிலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர், 
என்.சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad