திருமங்கலம் - விமான நிலைய மேம்பாலத்தில் சாலை தடுப்பில் எதிர்பாராவிதமாக மோதி , கன்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்து - ஓட்டுநர் உயிர் பிழைப்பு .
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கப்பலூர் மேம்பாலத்தில், கண்டெய்னர் லாரி திடீரென எதிர்பாராதவிதமாக சாலை நடுவில் போடப்பட்டிருந்த தடுப்பு பாலத்தில் மோதி , திடீரென விபத்துக்குள்ளானதில், விளையாட்டு கண்டெய்னர் மற்றும் லாரி தனித்தனியாக கீழே சரிந்து விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக ஓட்டுநர் தங்கராஜ் உயிர் பிழைத்துள்ளார் .
பொள்ளாச்சி இருந்து தூத்துக்குடிக்கு தேங்காய் நார்கீற்று ஏற்றி வந்த கன்டெய்னர் லாரி கப்பலூர் மேம்பாலத்தில் திடீரென எதிர்பாராத விதமாக கீழே சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. கண்டெய்னர் ஒருபுறமும், லாரி ஒரு புறமும் தனித்தனியாக சாலையில் சரிந்து விழுந்தது. இதனால் அவ்வழியே செல்லக்கூடிய வாகனங்கள் 20 நிமிடங்கள் வரை பாதிப்புக்குள்ளானது எந்தவித வாகனங்கள் செல்லாத காரணத்தினால் இதில் எந்தவித அசம்பாவிதம் நிகழவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக