கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை வட்டம் தாழக்குடி பேரூராட்சிக்குட்பட்ட வீரநாராயணமங்கலம் கீழத் தெருவை சார்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் வேலாயுதம்பிள்ளை அவர்களின் வீட்டு சமையல் அறையில் நான்கு அடி நீளமுள்ள நல்ல பாம்பு ஒன்று சமையல் எரிவாயு சிலிண்டரில் சுருண்டு பதுங்கி இருந்தது
இதனைப் பார்த்த அவருடைய மகன் மங்கபெருமாள் முன்னாள் பேரூராட்சி தலைவரும் கவுன்சிலர் ரோகிணிஅய்யப்பன் மற்றும் முன்னாள் கவுன்சிலர் மணி ஆகியோருக்கு தகவல் கொடுத்தனர்
தகவல் அறிந்த தாழக்குடி பேரூராட்சி முன்னாள் தலைவரும் கவுன்சிலர் ரோகினிஅய்யப்பன் மாவட்ட வன அலுவலர் அவர்களுக்கு தகவல் கொடுத்தார் தகவல் கொடுத்ததின் பேரில் ஆரல்வாய்மொழி வன காவலர் தனுஷ் உடனடியாக விரைந்து வந்து சமையல் அறையில் பதுங்கி இருந்த நல்ல பாம்பை பிடித்து ஆரல்வாய்மொழி வனப்பகுதியில் கொண்டு விட்டார் இதனால் வீட்டினுடைய உரிமையாளர் நிம்மதி அடைந்தார்.
கன்னியாகுமரி மாவட்ட தோவாளை தாலுகா செய்தியாளர்.
ஜெயசேகர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக