தாயமங்கலம் ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயில் பங்குனி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி வட்டம் தாயமங்கலத்தில் உள்ளம் மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயில் பங்குனி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. முத்துமாரியம்மன் சிறப்பு அலங்காரம், அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. இத்திருவிழாவிற்கு மானாமதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கிராம பொதுமக்கள் அலை கடலென திரண்டு இத்திருவிழாவில் விழாவில் பங்கேற்றனர். மேலும் சிவகங்கை மாவட்டத்தில் தாண்டி ராமநாதபுரம் மாவட்டம், மதுரை மாவட்டம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்த கோடி பெருமக்கள் வாகனங்களில் கூட்டம் கூட்டமாக ஸ்ரீ முத்து மாரியம்மனை தரிசிக்க அருளாசி பெற்று செல்கின்றனர். ஒருபுறம் கிடா வெட்டு, நேர்த்திக்கடன், தீச்சட்டி ஏந்துதல், பூமிதித்தல் உள்ளிட்ட வேண்டுதல்கள் பக்தர்களால் பரபரப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக