மதிமுக முதன்மை செயலாளர் துரைவைகோ பிறந்த நாளை முன்னிட்டு இலவச விபத்து காப்பீடு, நீர் மோர் பந்தல்,செயற்கை காலுக்கு பண உதவி - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 4 ஏப்ரல், 2025

மதிமுக முதன்மை செயலாளர் துரைவைகோ பிறந்த நாளை முன்னிட்டு இலவச விபத்து காப்பீடு, நீர் மோர் பந்தல்,செயற்கை காலுக்கு பண உதவி

IMG-20250404-WA0208

திருப்பூரில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தில் முதன்மை செயலாளரும்,திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான.துரை வைகோ அவர்களின் 52 வது பிறந்த நாளை ஒருகிணைத்த திருப்பூர் மாவட்ட மதிமுக சார்பில் வெகு விமர்சையாக கொண்டாடினர்.  சாலை ஓரத்தில் இருக்கக்கூடிய ஆதரவற்றோர்களுக்கு உணவளிக்கும் வகையில் செயல்பட்டு வரும் ஞானாலயா வள்ளலார் கோட்டத்தில் அன்னதானம் வழங்கும் விழா மாநகர் மாவட்ட செயலாளர்.அரிமா.நாகராஜ்,புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர்.புத்தரச்சல் மணி ஆகியோரது தலைமையில் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் மதிமுக மாநில அவைத்தலைவர்.ஆடிட்டர் அர்ஜுன் ராஜ் கலந்து கொண்டு அன்னதானத்தை துவக்கி வைத்தார்.

முன்னதாக துரை வைகோ அவர்கள் நீடூழி வாழ சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது. இதை தொடர்ந்து திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் அருகே கோடை வெய்யிலின் தாக்கத்தில் இருந்து  காக்கும் வகையில் 2 ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு தர்பூசணி பழம் வழங்கப்பட்டது. அதை தொடர்ந்து திருப்பூர் புறநகர் வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கே எஸ் தமிழ்செல்வன் ஏற்பாட்டில் பல்லடம் அருள்புரம் பகுதி ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் அவர்களின் நலன் கருதி 75 நபர்களுக்கு 5 லட்சம் ரூபாய்க்கான உயிர் காக்கும் விபத்து காப்பீடு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி அருள்புரத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கடந்த வருடம் ஏற்பட்ட சாலை விபத்தில் அருள்புரம் மதிமுக தோழரின் மகனுக்கு செயற்கை கால் பொருத்த மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் கே எஸ் தமிழ்ச்செல்வன் சார்பில் ரூபாய் 70,000 க்கான காசோலையை கழக அவைத் தலைவர் ஆடிட்டர் அர்ஜூனராஜ் அவர்கள் வழங்கினார். மேலும் கூடுதல் சிறப்பாக அவைத்தலைவர் அவர்கள் தன்னுடைய பங்காக ரூபாய் 25000 வழங்கினார். ஆகமொத்தம் கழக தோழரின் மகனுடைய செயற்கை கால் பொருத்த ரூபாய் 95,000 இந்நிகழ்ச்சியில் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் மாநில,மாவட்ட,ஒன்றிய பகுதி கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad