இன்று மஹாவீர் ஜெயந்தியை முன்னிட்டு தமிழக அரசு பொது விடுமுறை விட்டுள்ளது இன்று மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு உதகை மெயின் பஜார் சாலையில் அமைந்துள்ள ஜெயின் கோவிலில் நீலகிரி மாவட்ட ஜெயின் சமூகத்தினர் சார்பில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதில் மஹாவீரின் உருவ சிலையை ஜெயின் சமூகத்தினர் ஊர்வலமாக எடுத்துச் சென்றனர் இந்த நிகழ்வில் ஜெயின் சமூகத்தை சார்ந்த பெண்களும் ஆண்களும் குழந்தைகளும் அதிகமாக கலந்து கொண்டனர். இந்த ஊர்வலம் மெயின் பஜாரில் தொடங்கி கமர்சியல் வழியாக மீண்டும் மெயின் பஜார் கோவிலுக்கு சென்றடைந்தது.
மாவட்ட தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக செய்தியாளர் செரீஃப்.M.A,.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக