பழனியர் நிழற் கூடம் திறப்பு விழாவின் போது கட்டிய அலங்கார பூக்கள் வாடாத நிலையில் சரிந்து விழுந்த மேல் கூரை சீலிங்!
குடியாத்தம் , ஏப் 21-
வேலூர் மாவட்டம் குடியாத்தம் சீவூா் ஊராட்சி கள்லூர் பகுதியில் நாடாளு மன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் சுமார் 11 லட்சத்தில் கட்டப்பட்ட பயணியர் நிழற் கூடம் கடந்த 18 ஆம் தேதி
வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் அவர்கள் கலந்து கொண்டு
ரிப்பன் வெட்டி திறந்து. வைத்தார்
திறப்பு விழா நிகழ்ச்சிக்காக அலங்கரிக் கப்பட்ட பூக்கள் வாடாத நிலையில் நேற்று இரவு நிழற் கூடத்தின் மேற்கூரை யில் இருந்து சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து விழுந்தது இதனால் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர் இரவு நேரம் என்பதால் பொதுமக்கள் யார் இல்லாத நிலையில் அசம்பாவிதங்கள் நடைபெற வில்லை இதனால் இரவோடு இரவாக சரிந்து விழுந்த மேற்கூரை சிமெண்ட் பூச்சுகளை சரி செய்தனர் இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக