கோவிலூர் முருகப்பெருமானுக்கு பங்குனி உத்திர பால்குட விழா - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 12 ஏப்ரல், 2025

கோவிலூர் முருகப்பெருமானுக்கு பங்குனி உத்திர பால்குட விழா

 

IMG-20250411-WA0486

கோவிலூர் முருகப்பெருமானுக்கு பங்குனி உத்திர பால்குட விழா


தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவிலில் இருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் குழந்தை பாக்கியமும், சகல செல்வங்களும் தரும் நித்திய வினோத ராஜவள நாடு கோவிலூர் எம்ஜிஆர் நகர் நெல்லி தோப்பில் அமைந்துள்ள 7 ஊர் கிராம பங்காளிகளால் ஆதி காலத்தில் தோற்றுவிக்கப்பட்ட  


இராராமுத்திரை கோட்டை, புதுத்தெரு கிருஷ்ணாபுரம், நெல்லிதோப்பு MGR நகர், கோனூர், காந்தவனம், கோட்டூர், மெலட்டூர் )


அருள்மிகு வால் முனீஸ்வரர் ஸ்ரீ காத்தாயி அம்மன் திருக்கோவிலில் அமைந்துள்ள முருகப்பெருமானுக்கு பங்குனி உத்திர பால்குட விழாவை முன்னிட்டு கோவிலூர் பிரம்மஞானபுரீஸ்வரர் சிவன் கோவிலில் இருந்து 7 ஊர் கிராம பங்காளிகள் மற்றும் பொதுமக்களால் சுமார் 150 பால்குடங்கள் வெகு விமரிசையாக எடுக்கப்பட்டு அருள்மிகு ஸ்ரீ காத்தாயி அம்மன் திருக்கோவிலில் சென்றடைந்தனர். 7 ஊர் பங்காளிகள் சார்பாக பொதுமக்கள் 1000 பேருக்கு சிறப்பான அன்னதானமும் வழங்கப்பட்டது. இவ்விழாவினை 7 ஊர் பங்காளிகள் மற்றும் விழாக் குழுவினர்கள் ஏற்பாடு செய்திருந்தார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad