தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மூன்று புத்தகங்கள் வெளியீட்டு விழா!
வேலூர் , ஏப் 18 -
வேலூர் மாவட்டம் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மூன்று புத்தகங்கள் வெளியீட்டு விழா! மூளைக்கு 300 சொற்கள், முதல் ஸ்டெதஸ்கோப், குழந்தைகள் துளிர் ஆகிய மூன்று புத்தகங்கள் வெளியீட்டு விழா தமிழ்நாடு அறிவியல் இயக்கம், "அறிவியல் வெளி யீடு" குழுவின் சார்பில் திருத்தணியில் நடைபெற்றது.
வேலூர் மாவட்ட தலைவர் பே.அமுதா வெளியிட மாவட்ட செயலாளர் செநாஜனார்த்தனன்பெற்றுக்கொண்டார்
விழாவிற்கு இராணிப்பேட்டை மாவட்ட தலைவர் முனைவர் .அ.கலைநேசன் தலைமை தாங்கினார். முன்னதாக மாவட்ட செயலாளர் க.பழனிவேல் வரவேற்று பேசினார்.மாவட்ட துணை செயலாளர் எ.முத்துகிருஷ்ணன், துணைத்தலைவர்கள் க.கனசபை, மு.தருமன், நா.வேல்குமார், ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர்.அறிவியல் வெளியீடு மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.சுப்பிரமணிதொகுப்புரையாற்றினார் மாநில பொதுச்செயலாளர் முகமது பாதுஷா, மாநில பொருளாளர் எஸ்.சுதாகர் வேலூர் மாவட்ட தலைவர் முனைவர் பே.அமுதா ஆகியோர் மூன்று நூல்களையும் தனித்தனியாக வெளிட வேலூர் மாவட்ட செயலாளர் செ.நா.ஜனார்த்தனன், மாநில செயற்குழு உறுப்பினர் க.பூபாலன், வடசென்னை மாவட்ட செயலாளர் அரவிந்த வேலூர் கிளை செயலாளர் முதது சிலுப்பன் ஆகியோர் மூன்று புத்தகங்களையும் பெற்றுக்கொண்டனர்.
உலகை காட்டும் ஜன்னல்கள் என்ற புத்தகத்தினை அறிமுகம் செய்து வைத்து மாநில துணைத்தலைவர் என்.மாதவன் பேசினார். மாவட்ட துணைச் செயலாளர். எஸ். ஸ்ரீகாந்த், வாழ்த்தி பேசினார் அறிவியல் வெளியீடு, ராணிப்பேட்டை மாவட்ட ஒருங்கிணைப்பாளர். ஜே.ஸ்ரீதர் நன்றி கூறினார்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக