ஸ்ரீவைகுண்டம். ஏப்ரல் 14. தமிழ்நாடு பிராமணர் சங்கம் சார்பில் விஸ்வாஸூ வருட பஞ்சாங்கம் வெளியீட்டு விழா எம்பெருமானார் ஜீயர் சன்னதியில் நடந்தது.
ஜீயர் ஸ்வாமிகள் வெளியிட முதல் பிரதி மதுரை ராம்ஜி இரண்டாவது பிரதி ஸ்ரீவைகுண்டம் கள்ளப்பிரான் கோவில் ஸ்தலத்தார் ராஜப்பா வெங்கடாச்சாரி பெற்றுக் கொண்டனர்.
விழாவிற்கு தாம்பிராஸ் மாநில தலைவர் ஸ்ரீரங்கம் வரதராஜன். வைத்தியநாதன் முன்னிலை வகித்தார். ஆன்மீக சொற்பொழிவு ஆற்றிய ராம ப்ரியா. யாழினி ஆகியோருக்கு சஞ்சீவி சேவா விருது எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் வழங்கினார்.
இந்நிகழ்வில் தூத்துக்குடி வெங்கடேஷ். அனந்த வெங்கடாச்சாரி. வைகுண்ட ராமன். சேஷன். சம்பத். பங்கஜம். ராதா. மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக