குடியாத்தம் அருகே எருது விடும் திருவிழா மாடு முட்டி தொழிலாளி பலி!
குடியாத்தம் ,ஏப் 20 -
வேலூர் மாவட்டம் குடியாதம் அடுத்த அணங்காநல்லூர் மோட்டூரில் நேற்று எருது விடும் திருவிழா நடைபெற்றது
இதில் வேலூர் பேர்ணாம்பட்டு கே வி குப்பம் ஆந்திராவில் இருந்து சுமார் 150 க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டனர் இதில் கால்நடை மருத்து வர்கள் பரிசோதனை செய்த பின்னர் மாடுகள் போட்டியில் பங்கேற்றனர் முதல் பரிசு 75 ஆயிரம் இரண்டாவது பரிசு 60 ஆயிரம் மூணாவது பரிசு ரூ.50,000 மொத்தம் 55க்கும் மேற்பட்ட பரிசுகள் வழங்கப்பட்டது குடியாத்தம் தாலுக்கா போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் விழாவில் மாடு முட்டியதில் அகரம் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி பரந்தாமன் (வயது 32) என்பவர் படுகாயம் அடைந்தார்
அவரை மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் மேலும் மாடு முட்டியதில் ஆறு பேர் லேசான காயமடைந்தனர் இது சம்பந்தமாக குறித்து தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக