நெல்லை தென்காசி அரசு பேருந்துகளில் இனி ஜிபே போன் பே மூலம் டிக்கெட் எடுக்கலாம். புதிய வசதி அறிமுகம். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 16 ஏப்ரல், 2025

நெல்லை தென்காசி அரசு பேருந்துகளில் இனி ஜிபே போன் பே மூலம் டிக்கெட் எடுக்கலாம். புதிய வசதி அறிமுகம்.

நெல்லை to தென்காசி அரசு பேருந்துகளில் இனி ஜிபே போன் பே மூலம் டிக்கெட் எடுக்கலாம். புதிய வசதி அறிமுகம்.

நெல்லை அரசு போக்குவரத்து கழகம் கூறியிருப்பதாவது: நெல்லை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் பயணிகளுக்கு புதிய வசதிகளை ஏற்படுத்தி கொடுக்கும் விதமாக, பேருந்தில் டிஜிட்டல் முறையில் பணமில்லா பணப்பரிமாற்றம் செய்து பயணச்சீட்டு பெற்றுக்கொள்ளும் முறை நடைமுறை படுத்தியுள்ளது.

டிஜிட்டல் முறையில் டெபிட் கார்டை ஸ்வைப் செய்தோ அல்லது கியூ.ஆர் கோடு ஸ்கேன் செய்தோ அல்லது ஜி.பே போன் பே போன்ற பணப் பரிவர்த்தனை செய்தோ பணப்பரிமாற்றம் செய்து பேருந்தில் நடத்துனரிடம் பயணச்சீட்டு பெற்றுக்கொள்ளலாம். 

மேற்கண்ட டிஜிட்டல் முறையில் பணப்பரிமாற்றம் செய்து பயணிகள் பயணச்சீட்டு பெற்று பயன் பெற தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது. என கூறியுள்ளார்.

நெல்லை மாவட்ட செய்தியாளர் தங்கராஜ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad