நெல்லை மாவட்டம் ராதாபுரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட ரதவீதி கலையரங்கம் அருகில் மிகவும் பழமையான காவலர் குடியிருப்பு உள்ளது இந்த குடியிருப்பில் பல வருடங்களாக எந்தவித பராமரிப்பு இன்றி சேதமடைந்து முற்செடிகள் படர்ந்து உள்ளதால் விச பாம்புகள் அதிகமாக நடமாட்டம் உள்ளது
இன்னும் சில நாட்களில் சித்திரை திருவிழா நடைபெற இருப்பதால் பொதுமக்கள் இந்த காவலர் குடியிருப்பு அருகில் அமர்ந்துதான் கலைநிகழ்ச்சிகளை கண்டுசெல்வார்கள் மற்றும் இதன் அருகே இருபது குடும்பங்கள் சிறுகுழந்தைகளுடன் வசித்து வருகின்றனர் ஆகவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கும் மாறு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக