தூத்துக்குடி சிவன் கோவில் ராகு கேது பெயர்ச்சி விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பரிகாரம் செய்தனர்
தூத்துக்குடி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள அன்னை ஸ்ரீ பாகம் பிரியாள் உடனுறை அருள்மிகு ஸ்ரீ சங்கரராமேஸ்வரர் திருக்கோவில் என்று அழைக்கப்படும் சிவன் கோவில் ராகு கேது பெயர்ச்சி விழா இன்று மாலை 4 45 மணிக்கு நடந்தது
இதில் ராகு பகவான் மீன ராசியிலிருந்து கும்ப ராசிக்கும் கேது பகவான் கன்னி ராசியில் இருந்து சிம்ம ராசிக்கும் பெயர்ச்சி அடைந்தனர்
இதை முன்னிட்டு கேது பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது பின்னர் தீபாரணை நடந்தது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ரிஷபம் மிதுனம் சிம்மம் துலாம் விருச்சிகம் மகரம் கும்பம் மீனம் தனுசு ராசிக்காரர்கள்
தேங்காய் பழம் எள்ளு தானமாக கொடுத்து பரிகாரம் செய்தனர் பின்னர் சனி பகவானுக்கு எள்ளு எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி வழிபட்டனர்
பூஜைக்கான ஏற்பாடுகளை சண்முகம்பட்டர் செய்திருந்தார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக