நெல்லை மாநகராட்சி மன்ற கூட்டத்தில் சலசலப்பு. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 24 ஏப்ரல், 2025

நெல்லை மாநகராட்சி மன்ற கூட்டத்தில் சலசலப்பு.

நெல்லை மாநகராட்சி மன்ற கூட்டத்தில் சலசலப்பு

ரூ.1.4 கோடி சமுதாய நலக்கூடம் எந்த வார்டில் உள்ளது? என மண்டல தலைவர்கள் வாக்குவாதம்

திமுக கவுன்சிலர் தண்ணீர் பாட்டில் எரிந்து வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு


நெல்லை, ஏப்.24-
நெல்லை மாநகராட்சி மன்ற கூட்டத்தில் ரூ1.4 கோடி மதிப்பிலான சமுதாய நலக்கூடம் எந்த வார்டில் உள்ளது என மண்டல தலைவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டால் பரபரப்பு ஏற்பட்டது.

நெல்லை மாநகராட்சியில் இன்று காலை 10.37 மணிக்கு மாநகராட்சி மன்ற கூட்டம் தொடங்கியது. மேயர் ராமக்கிருஷ்ணன் என்ற கிட்டு தொடங்கி வைத்தார். தொடர்ந்து பகல்காம் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்கள் மற்றும் போப் பிரான்சிசுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. தச்சநல்லூர் மண்டல அலுவலக கட்டிடத்திற்கு கலைஞர் பெயர் வைப்பதறகாக நன்றி தெரிவித்து சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து பாளைமண்டல சேர்மன் பிரான்சிஸ் கோரிக்கைகளை முன்வைத்து பேசுகையில், 'வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவிற்கு இடைக்கால தடை பெற்று தந்த முதல்வருக்கு நன்றி தெரிவிக்கிறேன். குடிநீர் அளவை அளவீடு செய்யும் கருவிகளை பொருத்தும் ஸ்கேடா திட்டம் ரூ.46 கோடி மதிப்பீட்டில் கொண்டு வரப்பட்டது. அதன் நிலை என்ன? எனக் கேட்டார்.
 இதுகுறித்து சுகபுத்ரா கூறுகையில், ' 102 இடங்களுக்கு வாட்டர் மீட்டர் பொருத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் 57 இடங்களில் அந்த ரீடிங் அமைக்கப்பட்டு உள்ளது. எஞ்சிய இடங்களில் பணிகள் தொடர்ந்து நடக்கிறது.' என்றார்

பாளை மார்க்கெட் திறந்தும் செயல்பாட்டுக்கு வரவில்லை. குடிநீர் பிரச்னை உள்ளிட்ட பிரச்னைகள் தொடர்பாக சரமாரியாக கேள்வி எழுப்பினார். தொடரந்து பேசிய கமிஷனர் சுகபுத்ரா, '27*7 குடிநீர் வினியோக திட்டத்திற்கு பைப் லைன் அமைக்க நெடுஞ்சாலைத்துறையிடம் 21 இடங்களுக்கு அனுமதி பெறப்பட்டு உள்ளது.
அரியநாயகிபுரம் கூட்டு குடிநீர் திட்டம் விரைவில் கொண்டு வரப்படும். முதல் கட்ட பணிகள் நடந்து வருகிறது. முறப்பநாடு கூட்டு குடிநீர் திட்ட பணிகள் தொடங்க ஆய்வு நடந்து வருகிறது.
பாளை, காந்திமார்க்கெட் பாதி வேலை முடிந்து விட்டது. ஏற்கனவே அங்கு கடை வைத்திருந்தவர்கள், அவர்களது வாரிசுக்கு கடை ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 
 கலெக்டர் இதுகுறித்து ஆலோசனை நடத்தினார். மார்க்கெட் இன்னும் 10 நாளில் திறக்க நடடிக்கை எடுக்கப்படும்.' என்றார்.

தச்சநல்லூர் மண்டல தலைவர் ரேவதி கூறுகையில், ' மாநகராட்சியில் ஆகாஸ் லைட் ஒப்பந்ததாரரிடம் புகார் கொடுத்தால் ஒரு நாளில் சரிசெய்ய வேண்டும். ஆனால் அவர்கள் செய்யவில்லை' என புகார் அளித்தார்.

நெல்லை மண்டல சேர்மன் மகேஸ்வரி கூறுகையில், 'நெல்லையில் சாலைகளும் ஓடைகளும் போட வேண்டியது இருக்கு. அரியநாயகிபுரத்தில் இருந்து தற்போது தண்ணீர் வருவதில்லை.' என்றார்.
இதுகுறித்து சுகபுத்ரா கூறுகையில், 'அரியநாயகிபுரத்தில் இருந்து 35 முதல் 40 எம்எல்டி தண்ணீத் வருகிறது. தண்ணீர் தொடர்ந்து கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

மேலப்பாளையம் மண்டல சேரமன் அஜிதா இக்லாம் பாசிதா கூறுகையில், '2019ல் சமுதாய நலக்கூடம் கட்டப்பட்டு வருகிறது. ரூ.1 கோடியே 40 லட்சம் செலவில் கட்டி பாதியில் விடப்பட்டுள்ளது. பழைய வார்டு 37ல் இருந்தது. தற்போது அந்த சமுதாய நலக்கூடம் எந்த வார்டில் உள்ளது?' என கேள்வி எழுப்பினார்.
அப்போது பேசிய சுகபுத்ரா, 'ஏற்கனவே ஒதுக்கப்பட்ட நிதியை விட செலவு தொகை அதிகமாகிவிட்டது. பொது நிதி அல்லது சிஎஸ்ஆர் நிதி மூலம் பணிகள் விரைவில் முடிக்கப்படும்' என்றார்.
சுகாதார குழு தலைவர் ரம்ஜான் அலி சமுதாய நலக்கூடத்திற்கு நாங்கள் இடம் ஒதுக்கி பணி நடந்து வருகிறது. எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இருவரும் மாறி மாறி மைக்கில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது மேயர் கிருஷ்ணமூர்த்தி கமிஷனர் தலைமையில் குழு அமைக்கப்படும் என்றார்.

பணி நியமனகுழு உறுப்பினரும், 12வது வார்டு கவுன்சிலருமான கோகிலாவாணி கூறுகையில், '12வது வார்டில் ரங்கநாதன் பள்ளி தரை பேவர் பிளாக் போடும் பணி பாதியில் உள்ளது. அந்த வார்டில் அங்கன்வாடி பள்ளி சேதமாகி உள்ளது.' என்றார். உடனடியாக மேயர் கிருஷ்ணமூர்த்தி விடுமுறை காலம் நிறைவு பெறுவதற்குள் அங்கன்வாடி கட்டிடம், பள்ளியில் பாதியில் உள்ள பணிகளை முடிக்க வலியுறுத்தினார்.
அப்போது திமுக கவுன்சிலர் ரவீந்திரன் பேச அனுமதி தரவில்லை என தெரிவித்து தண்ணீர் பாட்டிலை எரிந்து விட்டு சென்ற சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியது.
---

செய்தி நெல்லை மாடசாமி +91 94428 83342

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad