தவறான சிகிச்சை அளித்த மருத்துவர்!உன்னால் என்ன செய்ய முடியும் என மருத்துவர் மிரட்டல் எஸ்பி அலுவலக த்தில் பாதிக்கப்பட்டவர் புகார்!. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 21 ஏப்ரல், 2025

தவறான சிகிச்சை அளித்த மருத்துவர்!உன்னால் என்ன செய்ய முடியும் என மருத்துவர் மிரட்டல் எஸ்பி அலுவலக த்தில் பாதிக்கப்பட்டவர் புகார்!.

தவறான சிகிச்சை அளித்த மருத்துவர்! கையை அசைக்க முடியாத அவலம்! உன்னால் என்ன செய்ய முடியும் என மருத்துவர் மிரட்டல் எஸ்பி அலுவலக த்தில் பாதிக்கப்பட்டவர் புகார்!.

திருப்பத்தூர் , ஏப் 21 -

கால் தடுக்கி கீழே தவறி விழுந்ததில் கை முறிவு! தவறான சிகிச்சை அளித்த மருத்துவர்! கையை அசைக்க முடியாத அவலம்! உன்னால் என்ன செய்ய முடியுமோ செய்து கொள் என மருத்துவர் மிரட்டல் எஸ்பி அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர் புகார்!..

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கேகே.தெரு பகுதியைச் சேர்ந்த முகமது ஜாவித் (வயது 39) கடந்த 2024 ஆம் ஆண்டு நடந்து சென்று கொண்டி ருந்தபோது திடீரென கால் தடுக்கி கீழே விழுந்தார். இதன் காரணமாக கையில் பலத்த காயம் ஏற்பட்டு கை முறிவு ஏற்பட்டது அப்போது ஆம்பூர் பகுதியில் உள்ள ஏபிசி ஹாஸ்பிடல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு கையில் ராடு வைத்து அறுவை சிகிச்சை செய்து கொண்டதாக தெரிகிறது. அறுவை சிகிச்சை செய்து கொண்ட போதும் கையில் அதிக வலி இருந்ததன் காரணமாக இதுகுறித்து மற்றொரு மருத்துவமனைக்கு சென்று சோதனை செய்ததில் ஏபிசி ஹாஸ்பிடல் மருத்துவர் கலீல் பாஷா தவறான சிகிச்சை அளித்துள்ளதாக கூறியுள்ள னர். எனவே இதுகுறித்து பாதிக்கப்பட்ட முகமது ஜாவித் மருத்துவர் கலீல் பாஷாவிடம் கேட்டபோது முறையான பதில் அளிக்காமல் கொலை மிரட்டல் விடுத்து அடி ஆட்களை வைத்து மிரட்டிய தாகவும் மேலும் உன்னால் என்ன செய்ய முடியுமோ செய்து கொள் என மருத்துவர் கூறுகிறார் இதால் மிகவும் மன உளைச் சலுக்கு ஆளாகியுள்ளேன். மேலும் எனது வாழ்வாதாரங்கள் மிகவும் பாதிக்கப் பட்டுள்ளது. எனவே கலீல் பாட்ஷா மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்தார்.

 செய்தியாளர் 
மோ.அண்ணாமலை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad