உளுந்தூர்பேட்டை அருகே நெடுமனூர் கிராமத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கிளைக் கழகம் திறப்பு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள நெடுமனூர் கிராமத்தில் தமிழக வெற்றி கழகம் சார்பில் கிளைக் கழகம் திறப்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதனை கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் திருக்கோவிலூர் பரணி பாலாஜி அவர்கள் கலந்துகொண்டு பெயர் பலகை திறந்து, கொடியேற்றினார், பின்பு அங்கு கலந்து கொண்ட 500-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு புடவை குடம், மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் போன்ற நலத்திட்ட உதவிகளை வழங்கினார் தொடர்ந்து பேசிய அவர் தமிழக வெற்றிக் கழகம் தமிழக மக்களுடன் தான் கூட்டணி என்றும், எந்தக் கட்சிக் கூட்டணி அமைத்தாலும் பயம் இல்லை என்றும் 2026 ல் தமிழக வெற்றி கழகம் பெரும்பான்மையாக வாக்குகள் பெற்று ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்தார், உடன் கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்ட இணைச்செயலாளர் மோகன் மற்றும் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள், இவர்களை நெடுமனூர் கிளை கழக தோழர்கள் வரவேற்றனர்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கள்ளக்குறிச்சி மாவட்ட ஒளிப்பதிவாளர் விஜயகாந்த் தமிழக குரல் இணையதள செய்தி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக