ஆற்காடு அருகே பகல் திருட்டு தொடர் பாக இருவர் கைது காவல் துறையினர் அதிரடி நடவடிக்கை!
ஆற்காடு , ஏப் 10 -
இராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு கிராமிய காவல் நிலைய எல்லைக் குட்பட்ட புதுப்பாடி, ஓழலை மற்றும் சாத்தூர் கிராமங்களில் பகல் திருட்டு தொடர்பாக ராணிப்பேட்டை காவல் கண்காணிப்பாளர். விவேகானந்தா சுக்லா IPS, அவர்களின் உத்தரவின் பேரில் ராணிப்பேட்டை காவல் துணை கண்காணிப்பாளர். இமயவர்மன் TPS அவர்களின் மேற்பார்வையில் ஆற்காடு கிராமிய காவல் ஆய்வாளர். சாலமன் ராஜா அவர்களின் தலைமையில் ராணிப் பேட்டை உட்கோட்ட குற்றப்பிரிவினர் 100க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக் களை ஆய்வு செய்து, சம்பவத்தில் ஈடுபட்ட திருப்பத்தூர் மாவட்டம் வாணி யம்பாடி பகுதியை சேர்ந்த காட்வின் மோசஸ் (வயது33) மற்றும் ஆலங்காயம் பகுதியை சேர்ந்த சரத்குமார் (வயது25) ஆகிய 2 இளைஞர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 5 சவரன் தங்க நகை மற்றும் 1 செட் வெள்ளி கால் கொலுசு மற்றும் திருட்டு பயன்படுத்திய இருசக்கர வாகனங்கள் ஆகியவை பறிமுதல் செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
ராணிப்பேட்டை மாவட்ட
செய்தியாளர் மு. பிரகாசம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக