பர்லியார் பகுதியில் சுற்றுலா வந்த வாகனம் விபத்து
நீலகிரி மாவட்டம் ஒரு மிகச்சிறந்த சுற்றுலாத்தலமாகும் இந்த சுற்றுலா தளத்திற்கு வந்து கண்டு களித்து விட்டு திரும்பும் பொழுது மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் பர்லியார் என்னும் பகுதியில் கர்நாடகாவை சேர்ந்த வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதில் பயணித்த பயணிகளுக்கு சிறுசிறு காயங்கள் ஏற்பட்டது உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மேட்டுப்பாளையம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளார்கள். உதகையில் கோடை சீசன் துவங்கும் நிலை உள்ளதால் வாகனங்கள் அதிகமாக வருவதால் வாகன ஓட்டிகள் மிக கவனமாக செல்லுமாறு காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார்கள்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட இணையதள செய்தி பிரிவு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக