ஈரோடு பெரியமாரியம்மன் வகையறா கோயில்களில் கம்பம் பிடுங்கும் விழாவும், மஞ்சள் நீராட்டு விழாவும் நேற்று (ஏப்ரல் 5) மாலை 3 மணிக்கு நடைபெற்றது. மாநகரில் உள்ள ஈரோடு பெரியமாரியம்மன் கோயில் மற்றும் அதன் வகையறாவை சேர்ந்த சின்னமாரியம்மன், காரைவாய்க்கால் மாரியம்மன் கோயில்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை ஆகும்.
இந்த கோயல்களில் ஆண்டுதோறும் குண்டம் மற்றும் தேர்த்திருவிழா வெகுவிமர்சையாக கொண்டாடப்படும். ஈரோடு பெரியமாரியம்மன், சின்னமாரியம்மன், காரைவாய்க்கால் மாரியம்மன் கம்பம் பிடுங்கும் நிகழ்ச்சி நேற்று (ஏப்ரல் 5) மாலை 3 மணிக்கு நடைபெற்றது.
மூன்று கோயில்களிலும் கம்பங்கள் பிடுங்கப்பட்டு, பெரியமாரியம்மன் கோயில் கம்பம் பன்னீர்செல்வம் பூங்கா வழியாகவும், சின்னமாரியம்மன் கோயில் கம்பம் அக்ரஹாரம் வீதி வழியாகவும், காரைவாய்க்கால் மாரியம்மன் கோயில் கம்பம் கச்சேரி வீதி வழியாகவும் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, மணிக்கூண்டு பகுதியில் மூன்று கம்பங்களும் ஒன்று சேர்ந்தன.
அதன்பின், மூன்று கோயில்களின் கம்பங்களும் ஈஸ்வரன் கோவில் வீதி வழியாக காமராஜர் வீதி, மீனாட்சி சுந்தரனார் சாலை, அரசு மருத்துவமனை ரவுண்டானா, மேட்டூர் சாலை, ஈரோடு பஸ் ஸ்டாண்ட், ஸ்வஸ்திக் கார்னர், பெரியார் வீதி, மரப்பாலம் மண்டபம் வீதி, ஆர்கேவி சாலை, டவுன் போலீஸ் ஸ்டேஷன் வழியாக இரவு காரைவாய்க்காலை அடைந்தன. பின்னர் மூன்று கோயில்களின் கம்பங்களும் வாய்க்காலில் விடப்பட்டன.
தமிழக குரல் இணையதள செய்தியாளர் ம.சந்தானம், ஈரோடு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக