காவல்துறை பணி என்பது ஒரு சேவை, பெருமை, பொறுப்பு உதவி ஆய்வாளர் தேர்வுக்கான வெற்றிப்பாதை இலவச பயிற்சி தொடக்க நிகழ்ச்சி. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 8 ஏப்ரல், 2025

காவல்துறை பணி என்பது ஒரு சேவை, பெருமை, பொறுப்பு உதவி ஆய்வாளர் தேர்வுக்கான வெற்றிப்பாதை இலவச பயிற்சி தொடக்க நிகழ்ச்சி.

காவல்துறை பணி என்பது ஒரு சேவை, பெருமை, பொறுப்பு உதவி ஆய்வாளர் தேர்வுக்கான வெற்றிப்பாதை இலவச பயிற்சி தொடக்க நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் புதிய முயற்சியாக கன்னியாகுமரி மாவட்ட இளைஞர்களுக்கு ஆண், பெண், மூன்றாம் பாலினத்தவர் பயன்பெறும் வகையில் உதவி ஆய்வாளர் தேர்வுக்கான இலவச பயிற்சியினை கன்னியாகுமரி மாவட்ட ஆயுதப்படை சமூக நலக்கூடத்தில் வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர். ஸ்டாலின் துவங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர், இளைஞர்கள் தங்களுக்கு கிடைக்கப்பட்ட நேரத்தை வீணடிக்காமல் திட்டமிட்டு உதவி ஆய்வாளர் தேர்விற்கு தங்களை தயார்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும்,
இந்த வகுப்பில் அனைத்து பாடங்களுக்கும் தனித்தனியாக முன் அனுபவம் உள்ள ஆசிரியர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்களை வைத்து வகுப்புகள் நடத்தப்படும் எனவும்,

ஒவ்வொரு பாடங்களின் தலைப்புகள் முன்கூட்டியே கொடுக்கப்பட்டு அதன் அடிப்படையிலும், மொத்தமாகவும் 50 க்கும் மேற்ப்பட்ட தேர்வுகள் நடத்தப்பட்டு அதன் மதிப்பெண்கள் உடனடியாக தெரிவிக்கப்படும் எனவும், தேர்வுகள் எழுதி அதன் மதிப்பெண்களை வைத்து இளைஞர்கள் தங்களுக்குள்ள பலம் மற்றும் பலவீனத்தை ஆராய்ந்து, எந்த பாடத்தில் பலவீனமாக இருக்கிறீர்கள் என்பதை கண்டறிந்து அந்த பாடத்தை முக்கியத்துவம் கொடுத்து படிக்க வேண்டும் எனவும்,

தங்களுக்கான நேர அட்டவணையை கணக்கிட்டு அதை தங்கள் பார்வைக்கு தெரியும் வகையில் ஒட்டி வைத்து அதன் அடிப்படையில் நேரத்தை பயனுள்ளதாக ஆக்க வேண்டும் எனவும்,
நம்பிக்கையுடன் படித்தால் அனைவரும் உதவி ஆய்வாளர் தேர்வில் வெற்றி பெறலாம் என்று கூறி வாழ்த்துக்களை தெரிவித்தார். காவல்துறை பணி என்பது ஒரு சேவை, பெருமை, பொறுப்பு 

அவ்வாறான நேர்மையான அதிகாரிகளை உருவாக்குவது மற்றும் காவல்துறை பொதுமக்கள் இடையே நல்லுணர்வை ஏற்படுத்துவதே இப்பயிற்சியின் நோக்கம் 
இந்நிகழ்வில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர்.மதியழகன், நாகர்கோவில் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர்.லலித் குமார், ஆயுதப்படை காவல் ஆய்வாளர்.
சுஜாதா, உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் உடனிருந்தனர்.

கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர், 
என்.சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad