ஜமாஅத்துல் உலமா சபை' சார்பாக 'வக்ஃபு வாரிய சட்ட திருத்த மசோதாவை' கண்டித்து "மாபெரும் கண்டன" பொதுக்கூட்டம் - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 14 ஏப்ரல், 2025

ஜமாஅத்துல் உலமா சபை' சார்பாக 'வக்ஃபு வாரிய சட்ட திருத்த மசோதாவை' கண்டித்து "மாபெரும் கண்டன" பொதுக்கூட்டம்

 

IMG-20250414-WA0005(1)

சிவகங்கையில் 'ஜமாஅத்துல் உலமா சபை' சார்பாக 'வக்ஃபு வாரிய சட்ட திருத்த மசோதாவை' கண்டித்து "மாபெரும் கண்டன" பொதுக்கூட்டம்.



தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை சார்பாக வக்ஃபு வாரிய சட்ட திருத்த மசோதாவை கொண்டுவந்துள்ள பாசிச பாஜக அரசை வன்மையாக கண்டித்து "மாபெரும் கண்டன பொதுக்கூட்டம்" தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்று நிலையில், சிவகங்கை மாவட்டம் சிவகங்கை அரண்மனை வாசலில் உள்ள சண்முகராஜா கலையரங்கத்தில் சிவகங்கை மாவட்ட தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை சார்பாக வக்ஃபு வாரிய சட்ட திருத்த மசோதாவை கொண்டுவந்துள்ள பாசிச பாஜக அரசை வன்மையாக கண்டித்து "மாபெரும் கண்டன பொதுக்கூட்டம்" ஜமாஅத்துல் உலமா சபை சார்பாக நடைபெற்றும் நிலையில், சிவகங்கை மாவட்ட தலைவர் எம். மூஹம்மது இப்ராஹிம் அவர்களின் முன்னிலையிலும், சிவகங்கை மாவட்ட அனைத்து பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் உலமா பெருமக்கள், சிவகங்கை மாவட்ட அனைத்து சமுதாய அமைப்புகளின் பொறுப்பாளர்கள் முன்னிலை வகித்தனர். 



இதில் மாண்புமிகு முன்னாள் நிதி அமைச்சர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு ப. சிதம்பரம், மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு கே. ஆர். பெரியகருப்பன், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி தமிழரசிரவிக்குமார், சிவகங்கை நகர் மன்ற தலைவர் திரு சி. எம்.‌ துரை ஆனந்த், இந்தியா கம்யூனிஸ்ட் கட்சி பேச்சாளர் திரு பி. எல். ராமசந்திரன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இம்மாபெரும் கண்டன பொதுக்கூட்டத்தில் வக்ஃபு வாரிய சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. 


மேலும் இந்நிகழ்வில் சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மைத்துறை தலைவர் திரு சையது இப்ராஹிம், திமுக மாவட்ட துணைச் செயலாளர் சேங்கைமாறன், தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை நிர்வாகிகள், மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மைத்துறை நிர்வாகிகள், திராவிட முன்னேற்றக் கழகம், விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள், கட்சி பிரமுகர்கள், உள்ளாட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் பெரும் திரளாக கலந்துகொண்டு வக்ஃபு வாரிய சட்ட திருத்த மசோதாவை கண்டித்து தங்கள் கண்டனங்களை பதிவு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad