திருநெல்வேலியில் அம்பேத்கர் சிலைக்கு பாஜக தலைவர் மாலை அணிவித்து மரியாதை. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 14 ஏப்ரல், 2025

திருநெல்வேலியில் அம்பேத்கர் சிலைக்கு பாஜக தலைவர் மாலை அணிவித்து மரியாதை.

தமிழக முதல்-அமைச்சர் ஸ்டாலின்
அமைச்சர் பொன்முடி மீது நடவடிக்கை எடுக்க பயப்படுகிறார். 2026 சட்டமன்ற தேர்தலில் ஒவ்வொரு வீட்டு பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் பொன்மொழியின் பேச்சை கவனத்தில் வாக்களிக்க வேண்டும் என நெல்லையில் பா.ஜனதா மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பரபரப்பு பேட்டி

சட்ட மேதை அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு
நெல்லை வடக்கு மாவட்ட பா.ஜனதா சார்பில் நெல்லை சந்திப்பு பஸ் நிலையம் முன்புள்ள அம்பேத்கர் சிலைக்கு பாரதிய.ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்துகொண்டு அம்பேத்கருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்: இந்த நாள் எனக்கு மிகவும் ராசியான நாள். கடந்த 2001 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இதே நாளில் அம்பேத்கர் உருவ சிலைக்கு மாலை அணிவித்து விட்டு நெல்லை எக்ஸ்பிரஸ் சென்னை செல்வதற்காக புறப்பட்டு சென்றேன். அப்போது முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா எனக்கு நெல்லை சட்டமன்ற தொகுதியில் வேட்பாளராக போட்டியிட வாய்ப்பை வழங்கினார். 

சுமார் 25 ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது பாரத பிரதமர் மோடி மற்றும் தேசிய தலைவர் நட்டா, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் தமிழகத்தின் பாஜக தலைவர் என்ற மிகப்பெரிய பொறுப்பினை எனக்கு வழங்கியுள்ளனர்.
அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றியவர் அம்பேத்கர். ஆனால் அரசியல் சாசன சபையில் அம்பேத்கருக்கு இடத்தை கொடுக்க காங்கிரஸ் மறுத்தது. அம்பேத்கர் என்ன திட்டங்கள் செய்தார் என்பதை அனைவரும் அறிய வேண்டும். அவரது நினைவிடங்களை கூட காங்கிரஸ் பராமரிக்கவில்லை. 

பாரதிய ஜனதா கட்சி பொறுப்பேற்ற பின்னர் பிரதமர் நரேந்திர மோடி அம்பேத்கரின் நினைவாலயம் உள்ளிட்ட பல்வேறு இடங்களை புதுப்பித்தது. தமிழகத்தில் அம்பேத்கருடைய நல்ல செயல்களை சொல்வதை விட்டுவிட்டு என்னெல்லாமோ சொல்லிக் கொண்டிருக்கின்றனர். தமிழகத்தில் அம்பேத்கர் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களை அவரை சிறைச்சாலையில் அடைப்பது போல் கூண்டில் வைத்து அடைத்துள்ளார்கள். இதனை மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.அ.தி.மு.க பாஜக கூட்டணி எந்த இழுபறியும் இல்லாமல் அமைந்துள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஒரு வருட காலம் உள்ளது. துணை முதல்வர் பதவி உள்ளிட்டவைகள் குறித்து இப்போதைக்கு எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை.

அமைச்சர் பொன்முடி பேசிய பேச்சு அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. அமைச்சர் பொன்முடியின் பேச்சை ஒவ்வொரு வீட்டு பெண்மணி மட்டுமல்லாது ஒவ்வொரு வீட்டின் ஆண்மகனும் நினைத்து பார்க்க வேண்டும். 2026-ல் அதனை நினைத்து பார்த்து வாக்களிக்க வேண்டும்.

அமைச்சர் பொன்முடி விவகாரத்தில் இதுவரை முதல்-அமைச்சர் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர் மீது நடவடிக்கை எடுக்க தமிழக முதல்-அமைச்சர் பயப்படுகிறார்.
போக்குவரத்து துறை பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசியத்துறை என்பதனால் அரசு எடுத்து நடத்துகிறது. போக்குவரத்து துறையில் ஏற்படக்கூடிய நஷ்டத்தை அரசு முறையாக நிதி ஒதுக்கி செய்து நிவர்த்தியாக்கி கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

செய்தியாளர் மாடசாமி திருநெல்வேலி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad