திருக்காட்டுப்பள்ளி அக்னீஸ்வரர் கோயிலில் பங்குனி உத்திர விழாவிற்காக ஆற்றில் பந்தக்கால் நடும் விழா நடந்தது.
திருக்காட்டுப்பள்ளியில் சௌந்தரநாயகி சமேத அக்னீஸ்வரர் திருக்கோயில் உள்ளது. இக்கோயிலில் வருடம் தோறும் பங்குனி உத்திரம் மஹோற்சவ விழா விமர்சையாக கொண்டாடப்படும். அது போல இவ்வாண்டும் நடத்த முடிவு செய்யப்பட்டு விழா 10 நாட்கள் நடந்து வருகிறது. அதில் ஒன்றாக காவிரி ஆற்றில் வரும் 10 ஆம் தேதி நடக்கவுள்ள முக்கிய நிகழ்ச்சியான பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளி அருள்பாளிக்கவுள்ளார். அதற்கான பந்தகால் நடும் விழா நேற்று ஆற்றில் நடந்தது. நிகழ்ச்சியில் மண்டக படிதாரர் வளப்பக்குடி தர்மராஜ் குடும்பத்தினர், பங்குனி உத்திர மஹோற்சவ கமிட்டி தலைவர் வக்கீல் ஜெயக்குமார், பொதுச்செயலாளர் ஜெயராமன், பொருளாளர் விஜி , துணைத் தலைவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். கோயில் செயல் அலுவலர் பிரகதீஸ்வரன், மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திக்காக தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் தாலுக்கா நிருபர் ஜே.ஜேசுராஜ்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக