மாவட்ட ஆட்சியர் உடனடி நடவடிக்கை முறை கேடாக மரம் வெட்டி விற்பனை தெடர்பாக சமுக ஆர்வலர்கள் கோரிக்கை! - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 3 ஏப்ரல், 2025

மாவட்ட ஆட்சியர் உடனடி நடவடிக்கை முறை கேடாக மரம் வெட்டி விற்பனை தெடர்பாக சமுக ஆர்வலர்கள் கோரிக்கை!

மாவட்ட ஆட்சியர் உடனடி நடவடிக்கை முறை கேடாக மரம் வெட்டி விற்பனை தெடர்பாக சமுக ஆர்வலர்கள் கோரிக்கை!! 
ராணிப்பேட்டை , ஏப் 03 -

ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி ஒன்றியம்  மோசூர் கிராமத்தில் இலவச பட்டா நிலத்தில் மற்றும் மேய்க்கால் புறம்போக்கு உள்ள வேப்பமரம் தேக்கு மரம் செம்மரம் உள்ளது அதை முறை கேடாக வெட்டி விற்பனை செய்தது புகார் தெரிவிக்கப்பட்டது புகாரின் அடிப்படை யில் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் ஆய்வாளர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை செய்தார்கள். விசாரணையின் போது ஏற்றி சொல்ல இருந்த வாகனத்தில் இருந்த கட்டையை கீழே தள்ளிவிட்டு வண்டி எடுத்து சென்று விட்டனர் மேலும் அங்கிருந்த கட்டைகள் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் ஆய்வாளர் பார்வையிட்டு படம் எடுத்துக் கொண்டு வந்து விட்டனர் இந்த தகவலை வட்டாட்சியர் அவர்களுக்கு நாங்கள் புகார் தெரிவித்து விட்டோம் என்று கூறுகின்றனர் 
ஆனால் இரண்டு நாட்கள் ஆன நிலையில் அங்கிருந்த கட்டைகளை கைப்பற்றி எடுத்து வர வில்லை மரம் வெட்டிய நபர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை வேப்பமரம் தேக்கு மரம் புங்க  மரம் உயிருள்ள மரங்களை வெட்டி விட்டு எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல்  அங்கிருந்த மரக்கட்டைகள் சிறிது சிறிதாக வெட்டிய நபர் எடுத்துச் செல்கிறார் மற்றும் சிறிது கிளைகளும் தீ தவைத்து கொளுத்தினார் புறம்போக்கு இடத்தில் உள்ள மரங்களை திருட்டுத் தனமாக வெட்டி எடுத்துச் சென்றது மற்றும் முறைகேடாக அரசு விதிமுறை யை மீறி இலவச பட்டாவை கிரயம் வாங்கி அதன் அருகில் உள்ள மேய்க்கால் புறம்போக்கு இடத்தை ஆக்கிரமித்து செய்த தலைவர் மீது மாவட்ட நிர்வாகம் இதுவரையில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை இதில் நேரடியாக மாவட்ட ஆட்சியர் அவர்கள் கவனத்திற்கு கொண்டு சென்று திருட்டுத்தனமாக உயிர் உள்ள மரங்களை வெட்டிய நபரை விசாரணை செய்து தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு சமுக ஆர்வலர்கள் சார்பாக மற்றும் ஊர்  பொதுமக்கள் சார்பாகவும் கேட்டுக்கொள்கிறோம் .

சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad