கோவைக்கு கே.ஜி.சாவடி பகுதியில் அமைந்துள்ள தானிஷ் அகமது தொழில்நுட்பக் கல்லூரியும், நாட்டு நலப்பணித்திட்ட அமைப்பு மற்றும் உன்னத் பாரத் அபியான், ஆர் ஆர் சி, ஒய் ஆர் சி, போதைப்பொருள் தடுப்பு அமைப்பு மற்றும் கோவை உயிர் அமைப்பும் இணைந்து போதையில்லா தமிழகம் மற்றும் விபத்தில் கோவை விழிப்புணர்வு பேரணியானது கே.ஜி. சாவடி பகுதியில் இருந்து எட்டிமடை வரை நடைபெற்றது இதில் சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் மற்றும்ஐம்பதுக்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் கலந்துகொண்டு விழாவினை சிறப்பு செய்தனர்.
இந்த நிகழ்ச்சியினை திரு.கே.திருமலைசாமி சப் இன்ஸ்பெக்டர் போலீஸ் தலைமயில் கல்லூரியின் முதல்வர் முனைவர் கே.ஜி.பார்த்திபன் கொடி அசைத்து துவக்கி வைத்தார். இந்த நிகழ்வில் கல்லூரி நிர்வாக இயக்குனர் கே. ஏ அக்பர் பாஷா தலைமை நிர்வாக அதிகாரி திரு. ஏ தமீஸ் அஹமது கலத்து கொண்டு சிறப்பு செய்தனர்.
இறுதியாக போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி எடுக்கப்பட்டது. இந்த நிகழ்விற்கு ஏற்பாட்டினை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் திரு. நா. தினேஷ்குமார் மற்றும் பேராசிரியர்கள் ஏற்பாடு செய்து இருந்தனர்.
இச்செய்திக் குறிப்பினை தங்கள் நாளிதழில் செய்திக் குறிப்பாக வெளியிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் கலைவாணி மற்றும் கோவை மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக