இளையான்குடி அரசு மருத்துவமனையில் இரவு நேர மருத்துவர்கள் இல்லாதது குறித்து சட்டப்பேரவையில் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்ற வானதி சீனிவாசன்.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு பயன்படும் இளையான்குடி வட்ட மருத்துவமனையில் இரவு நேர மருத்துவர்கள் இல்லாததால், சிவகங்கை அரசு பொது மருத்துவமனை நோக்கி செல்லும் அசாதாரண நிலை குறித்து அரசின் கவனத்தை ஈர்க்க சட்டமன்ற விதி எண் 55ன் கீழ் அவசர பொது முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வினைக் குறித்து மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு வருவதாக, மாண்புமிகு பேரவை தலைவர் அவர்களுக்கு கவன ஈர்ப்பு தீர்மான கோரிக்கையை கடிதம் மூலமாக கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் திருமதி வானதி சீனிவாசன் அவர்கள் எழுதியுள்ளார். இது குறித்து பொதுமக்கள் சிலரிடம் கேட்டபோது அவர்கள் கூறுகையில், இளையான்குடி அரசு மருத்துவமனையில் இரவு நேர மருத்துவர்கள் இல்லாதது தொடர்பாக பல்வேறு புகார்கள் தெரிவிக்கப்பட்டு நடவடிக்கைகள் ஏதும் எடுக்கப்படவில்லை, சட்டப்பேரவையில் வானதி சீனிவாசன் அவர்கள் கவன ஈர்ப்பு தீர்மான கோரிக்கையை முன் வைத்துள்ளதை வரவேற்கிறோம், மேலும் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி தமிழரசிரவிக்குமார் அவர்கள் தனது சொந்த தொகுதிக்குட்பட்ட இளையான்குடியில் நடக்கும் அவல நிலைகளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறாரா என்ற கேள்வியையும் முன்வைத்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக