அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மில் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம்!
திருப்பத்தூர் , ஏப் 10 -
திருப்பத்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப் பணித்திட்ட சிறப்பு முகாம் இன்று 09.04.2025 புதன்கிழமை புதுப்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் கல்லூரி முதல்வர் முனைவர் பெ.சீனுவாசகுமரன் மற்றும் திருவள்ளுவர் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப் பாளர் முனைவர் செ. விஜய் ஆனந்த் அவர்கள் தலைமையில் வெகு சிறப்பாக துவங்கப்பட்டது. இவ்விழாவில் நாட்றம் பள்ளி வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் மீனாட்சி தேவி மற்றும் தூய நெஞ்சக் கல்லூரி தமிழ் துறை பேராசி ரியரும் நாட்டு நலப்பணித்திட்ட அலுவல ருமான முனைவர் க. மோகன் காந்தி மற்றும் அம்மணாங் கோயில் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி. கண்ணகி அன்பழகன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களிடம் சிறப்புரை ஆற்றினார் கள். இச்சிறப்பு முகாமின் மூலம் நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் புதுப் பேட்டை சார்ந்த பள்ளிகள், கோயில்கள், மருத்துவமனைகள், சாலைகள் ஆகிய வற்றை தூய்மைப்படுத்துவதோடு மக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி களையும் நடத்த இருக்கிறார்கள். நிகழ்ச்சியின் இறுதியாக கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் ப.நரசிம்மன் நன்றியுரை வழங்கினார்கள்.
திருப்பத்தூர் தாலுகா செய்தியாளர் மோ அண்ணாமலை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக