திருப்பூரில் ரேசன்கடைகளில் காலாவதியான உணவு பொருட்கள் விற்பனை நடைபெறுவதாக சமூக ஆர்வலர் ஈ.பி.அ.சரவணன் கோரிக்கை வைத்தார் இதைத் தொடர்ந்து உணவு பொருட்களை பினாயில் ஊற்றி அளித்தனர்
408 பாக்கெட் பறிமுதல்.ரூ.10,521 மதிப்புள்ள காலாவதியான உணவு பொருட்களை பினாயில் ஊற்றி அழித்த உணவு பாதுகாப்பு துறையினர்
காலாவதியாகி 9 மாதங்களான உணவு பொருட்களை ரேசன்கடைகளில் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது
திருப்பூர் மாவட்ட பகுதிகளிலுள்ள ரேசன்கடைகளில் தொடர்ச்சியாக காலாவதியான பொட்டுகடலை, பிரியாணி பேஸ்ட், சேமியா உள்ளிட்ட பல மளிகை பொருட்கள் காலாவதியாகிய நிலையில் உரிய ரசீதுகள் இன்றி விற்பனை செய்கின்றனர்.
இது தொடர்பாக கடந்த வாரம் நடைபெற்ற தன்னார்வ நுகர்வோர் அமைப்புகளின் முதலாம் காலாண்டு கலந்தாய்வு கூட்டத்தில் சமூக ஆர்வலர் ஈ.பி.அ.சரவணன் வலியுறுத்தி மாவட்ட பகுதிகளிலுள்ள ரேசன்கடைகளில் விற்பனை செய்கின்ற மளிகை பொருட்களின் தரத்தை உறுதி செய்து அவ்வபோது ஆய்வுகள் நடத்தி மக்களுக்கு மளிகை பொருட்களுக்கு ரசீது வழங்க வேண்டுமென கோரிக்கை வைத்திருந்தார்.
திருப்பூர் வடக்கு வட்டத்திலுள்ள ரேசன்கடைகளில் காலாவதியான மளிகை பொருட்கள் விற்பனை செய்கின்றதாக தொடர்ச்சியாக புகார் எழுந்த நிலையில் இன்று வடக்கு வட்டத்திலுள்ள செட்டிபாளையம் கூட்டுறவு சங்கத்தின் கீழ் செயல்படுகின்ற 7 ரேசன்கடைகளில் அதிரடியாக மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் ஸ்டாலின் பிரபு, கிருஷ்ண மூர்த்தி ஆகியோர்கள் நேரிடையாக சோதனை நடத்தினர்.
அப்போது நந்தா நகரிலுள்ள ரேசன்கடையில் சோதனை செய்த போது காலாவதியான சேமியா-170.கிராம் பாக்கட் எண்ணிக்கை-129 மதிப்பு ரூ.2,709, மற்றும் பிரியாணி பேஸ்ட் 50கிராம் பாக்கெட் எண்ணிக்கை-279 மதிப்பு ரூ.7,812 உள்ளிட்ட மளிகை பொருட்கள் காலாவதியாகி 9 மாதங்கள் ஆகியதை கண்டறிந்து உடனடியாக சம்பந்தப்பட்ட செட்டிபாளையம் கூட்டுறவு சங்கத்தின் செயலாளர் பூங்கோதை முன்னிலையில் பறிமுதல் செய்யப்பட்டு காலாவதியான சேமியா மற்றும் பிரியாணி பேஸ்ட் பாக்கெட்களை பினாயில் ஊற்றி அழிக்கப்பட்டது.
இது தொடர்பாக நோட்டீஸ் வழங்கப்பட்டது.
இது தொடர்பாக மாவட்ட பகுதிகளிலுள்ள அனைத்து ரேசன்கடைகளிலும் தொடர்ச்சியாக சோதனை நடத்தி காலாவதியான மளிகை பொருள்களை ரேசன்கடைகளில் விற்பனை செய்கின்ற தை முற்றிலுமாக தடை செய்ய வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக