கோடையின் வெப்பத்தில் இருந்து மக்களை காத்து தாகம் தணிக்
தமிழக முதலமைச்சர் அறிவுறுத்தின்படி தண்ணீர் பந்தல் திறப்பு!
ராணிப்பேட்டை ,ஏப் 06 -
பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தண்ணீர் பந்தல் அமைத்து மக்களின் தாகம் தீர்க்கும் வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் பேரூர் தி.மு.க சார்பில், பேரூர் கழக செயலாளர் N.R.சீனிவாசன் அவர்கள் தலைமையில், தண்ணீர் பந்தல் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பாக அழைப் பாளராக, நெமிலி கிழக்கு ஒன்றிய செயலாளர், நெமிலி ஒன்றிய பெருந்தலைவர் பெ.வடிவேலு மற்றும் பனப்பாக்கம் பேரூராட்சி மன்றத் தலைவர், கவிதா சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, பொதுமக்களுக்கு இளநீர் கிரிணிபழம், தர்பூசணி, வெள்ளரிக்காய், மற்றும் குளிர்பானங்களை வழங்கினர்
இதில், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் V.S.A.குலோத்துங்கன், மாவட்ட பொறியாளர் அணி அமைப் பாளர் N.K.சரவணன், SGB.ராமு, MCD.பால சுந்தரம், ரோஸ், J.ரேணுகோபால், சாரதி, பாலமுருகன், கிருஷ்ணமூர்த்தி மற்றும் கழகத்தினர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
தமிழக குரல் சிறப்பு செய்தியாளர் மு.பாக்கியராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக