வாணியம்பாடி நகராட்சி முஸ்லிம் பெண்கள் நடுநிலைப்பள்ளி ஆண்டு விழா! - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 6 ஏப்ரல், 2025

வாணியம்பாடி நகராட்சி முஸ்லிம் பெண்கள் நடுநிலைப்பள்ளி ஆண்டு விழா!

வாணியம்பாடி நகராட்சி முஸ்லிம் பெண்கள் நடுநிலைப்பள்ளி ஆண்டு விழா!

வாணியம்பாடி,ஏப்.6- 

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பஷீராபாத் பகுதியில் உள்ள நகராட்சி முஸ்லிம் பெண்கள் நடுநிலைப்பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி உதவி தலைமை ஆசிரியர் நயீமா ஃகாதூன் தலைமை வகித்தார். 24வது வார்டு உறுப்பினர் கலீம் பாட்ஷா, கல்வி குழு உறுப்பினர்கள் எம்.இஷ்தியாக் அஹமத், இர்ஷாத் கான், தவுசீப் அஹமத், ரஹ்மத்ல்லா, அஜ்மதுல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் என். ராஹத் பீரான் அனைவரையும் வரவேற்றார். இதில் சிறப்பு அழைப் பாளர்களாக 25வது வார்டு உறுப்பினர் ஏ.நாசீர் கான், உருது மாவட்ட வட்டார கல்வி அலுவலர் ஷாஹினா கஃமர், நாட்றம்பள்ளி வட்டார கல்வி அலுவலர் சரவணன், வட்டார கல்வி பயிற்சியாளர் வெற்றிவேல் ஆகியோர் கலந்துகொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றி தழ்களை வழங்கி வாழ்த்தி பேசினர். தொடர்ந்து இந்த ஆண்டிற்க்கான மாணவிகள் சேர்க்கை தொடங்கி வைத்து பள்ளியில் புதிய 10 மாணவிகளை சேர்த்து அவர்களுக்கு இலவச சீருடை வழங்கினர்.தொடர்ந்து மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை கூடியிருந்த அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், மாணவிகள், பெற்றோர்கள் மற்றும் பகுதி மக்கள் கலந்து கொண்டனர்.முடிவில் ஆசிரியை முஸரத் சுல்தானா நன்றி கூறினார்.

 வாணியம்பாடி தாலுகா செய்தியாளர் 
R.மஞ்சுநாத் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


Mini Popup Ad