இராமநாதபுரம் பொதுமக்களுக்கு பஜார் காவல்நிலையம் சார்பில் அரண்மனை முன்பு தினமும் நீர் மோர் ஜூஸ் வழங்கி வருகின்றனர்.
இராமநாதபுரம் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கோடை வெயில் அதிகரிப்பதால் பொதுமக்கள் பயனடையும் வகையில் இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை சார்பில் பல்வேறு இடங்களில் தண்ணீர் பந்தல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G.சந்தீஷ், திறந்துவைத்து பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கினார்.
இதனை தொடர்ந்து ராமநாதபுரம் பஜார் காவல் நிலையம் சார்பாக அரண்மனை முன்பாக திறக்கப்பட்ட தண்ணீர் பந்தலில் பொதுமக்களுக்கு நீர், மோர், தர்பூசணி ஜூஸ் என தினமும் வழங்கி வருகின்றனர்.இதில் பஜார் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சிவக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் ராஜா சப் இன்ஸ்பெக்டர்கள் அய்யனார், பூமி, செல்வம் தனிப்பிரிவு தலைமை ஏட்டு முரளிதரன் பஜார் காவலர்கள் செய்து வருகின்றனர்,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக