கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் முன்னெடுப்பில் மாவட்டத்திலுள்ள அனைத்து, அதிகாரிகள் மற்றும் காவலர்கள் சைபர் கிரைம் மற்றும் தொழில்நுட்ப அறிவை வளர்த்துக் கொள்ள பயிற்சி ஆயுதப்படையில் வைத்து தொடங்கப்பட்டது.
மாவட்டத்தில் உள்ள அனைத்து காவலர்களும் தொழில்நுட்ப அறிவு மற்றும் சைபர் கிரைம் அறிவை வளர்த்துக் கொள்வதன் மூலம் பொது மக்களுக்கு உதவியாகவும், வழக்குகளின் சிறந்த புலன்விசாரணைக்கு உதவியாகவும், நீதிமன்ற விசாரணைகளில் குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தரவும் சிறப்பாக செயல்பட முடியும்.
சைபர் கிரைம் பயிற்சியில் சைபர் கிரைம் விழிப்புணர்வு, பொதுவான குற்றங்கள், CEIR portal, NCRP portal பற்றிய வகுப்புகள், மற்றும் photography,videography Scientific evidence போன்ற வகுப்புகளும் நடைபெறுகிறது .
இந்த நிகழ்வின் போது சைபர் கிரைம் கூடுதல் கண்காணிப்பாளர்.நாகசங்கர் மற்றும் சைபர் கிரைம் ஆய்வாளர்,உதவி ஆய்வாளர்களால் மாவட்டத்தில் உள்ள அனைத்து அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு பயிற்சி வழங்கப்படும்.
கன்னியாகுமரி மாவட்ட புகைப்பட கலைஞர்.
தமிழன்
T.ராஜேஷ்குமார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக