மத்திய அரசின் வக்பு திருத்த சட்டத்தை எதிர்த்து மக்கள் ஜனநாயக முன்னேற்ற கழகம் மற்றும் இந்திய தேசிய லீக் கட்சிகள் ஆர்ப்பாட்டம்.
மத்திய அரசு வக்ஃப் சட்ட திருத்தம் என்கிற பெயரில் இஸ்லாமிய சிறுபான்மை மக்களை நசுக்குவதற்கும்,ஒடுக்குவதற்கும், அவர்களின் நிலங்களை பள்ளிவாசல்களை,தர்காக்களை ஆக்கிரமிக்கவும் கொண்டு வரப்பட்டுள்ள கருப்பு சட்டத்தை எதிர்த்து,இந்திய தேசிய லீக் கட்சி யின் சார்பில் பல்லடத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்,
மக்கள் ஜனநாயக முன்னேற்ற கழகத்தின் நிறுவனர் & அகிம்சை தலைவர் இப்ராஹிம் பாதுஷா
அவர்கள் மற்றும் தேசிய லீக் கட்சியின் பொருளாளரும் திருப்பூர் மாவட்ட பொறுப்பாளர் ஆகிய ஹாஜி அஸ்லம் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.
மேலும் மக்கள் ஜனநாயக முன்னேற்ற கழகத்தின் திருப்பூர் மாநகர் மாவட்டம்,
தெற்கு மாவட்டம்,
மங்கலம் ஒன்றிய கழகம்
உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகள்
பொறுப்பாளர்கள்
கலந்து கொண்டு இந்திய தேசிய லீக் கட்சியின் நிர்வாகிகளோடு இணைந்து பாசிச ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டது. இந்த நிகழ்வில் இந்திய தேசிய லீக் கட்சி மற்றும் மக்கள் ஜனநாயக முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகள் பொதுமக்கள் பெண்கள் திரளாக கலந்து கொண்டனர்.
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக