வாலாஜாபேட்டையில் வி.சி.க. சார்பில் டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள் விழா திருவருவர் சிலைக்கு மாலை அணி வித்து மரியாதை!
ராணிப்பேட்டை , ஏப் 15 -
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா பேட்டை நகராட்சி அலுவலகத்தின் வெளியே சட்ட மாமேதை அம்பேத்கரின் 135-ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு விடுதலைசிறுத்தை கட்சியின் மத்திய மாவட்ட கழகத்தின் சார்பாக வாலாஜா நகர செயலாளர் மேஷாக் மூர்த்தி தலைமையில் மத்திய மாவட்ட செயலாளர் சீம.ரமேஷ் கர்ணா சிறப்பு விருந்தினராக வருகை தந்து பல்வேறு பூ மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த அம்பேத்கர் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதோடு கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் என அனைவருக்கும் அம்பேத்கர் பிறந்த நாளை கொண்டாடும் விதமாக இனிப்புகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர்.இந்த நிகழ்வில் முன்னாள் மாவட்ட செயலாளர் குண்டா சார்லஸ், மண்டல துணைச் செயலாளர் தமிழ், தொகுதி மாந்தாங்கள் ராஜா, ராமச்சந்திரன், ஆர் ஜே.சுரேஷ் மற்றும் வாலாஜா நகரத்தின் சார்பாக பொரு ளாளர் முனுசாமி, நகர துணைச் செயலாளர்கள் விஜய்கோபி, சுந்தர், சமூக நல்லிணக்க பேரவை வாக்கி சரவணன், மாவட்ட மாணவரணி ஞானசேகர், நகர தொழிலாளரணி வெளிச்சம் குமார், மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியின் நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்
ஒருங்கிணைந்த மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே சுரேஷ்குமார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக