கங்கை அம்மன் சிரசு திருவிழாவை முன்னிட்டு பால் கம்பம் நடும் நிகழ்ச்சி !
குடியாத்தம் , ஏப் 07 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் புகழ்பெற்ற கெங்கை அம்மன் சிரசு திருவிழாவை முன்னிட்டு பால் கம்பம் நடும் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில்ஏராளமான பக்தர் கள் காலை முதல் சுவாமி தரிசனம்
குடியாத்தம் வேலூர் மாவட்டம் குடியாத் தம் கோபாலபுரம் ஸ்ரீ அருள்மிகு கெங்கை அம்மன் ஆலயத்தில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் 1 ம் தேதி சிரசு திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும்
இதில் ஆந்திரா கர்நாடகா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல லட்சம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள் இதனிடையே இந்த ஆண்டு சிரசு திருவிழா வரும் மே மாதம் 15 ஆம் தேதி நடைபெறுகிறது இந்த ஆண்டு சுமார் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில் சிரசு திருவிழாவுக்கான தொடக்க நிகழ்ச்சியாக பால் கம்பம் நடும் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது முன்னதாக கோயில் வளாகத்தில் சுற்றி பால் கம்பம் பக்தர்கள் ஆரவாரத்துடன் எடுத்துவரப்பட்டு பால் கம்பம் நடப்பட்டு பாலை ஊற்றி பால் கம்பம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது முன்னதாகமூலவர் கெங்கையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாதாரணை நடைபெற்றது இதில் குடியாத்தம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராள மான பக்தர்கள் கலந்து கொண்டனர்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக