டாக்டர் எம்ஜிஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா
மாத்தூர் , ஏப் 6 -
திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆண்டு விழா மற்ற விளையாட்டு விழா நடைபெற்றது
நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் த க கங்கா தலைமை தாங்கினார் ஊராட்சி மன்ற தலைவர் ஆர் சுதா பிரியா ரஞ்சித் குமார் வரவேற்புரை ஆற்றினார்
இந்நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட
ஊராட்சி குழு மற்றும் திட்ட குழு தலைவர் மு பாபு சிறப்பு விருந்தினர்கள் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் ஏசி வில்வ நாதன் அணைக்கட்டு ஒன்றிய குழு உறுப் பினர் சி பாஸ்கர் ஒன்றிய கவுன்சிலர் சுதாகர் அணைக்கட்டு ஒன்றிய செயலா ளர் த முரளி மாவட்ட கவுன்சிலர் கிருஷ் ணன் மேனன் ஒன்றிய கவுன்சிலர் உஷா நந்தினி பாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டனர் இதில் இன்னர் வீல் சங்கம் சார்பாக கல்லூரியில் படிக்கும் மாணவி களுக்கு நாப்கின் எரிக்கும் எந்திரம்
( Napkin Burning machine )இன்னர்வீல் சங்கத் தலைவி ஆயிஷா ஜாவித்
முன்னாள் நகர மன்ற தலைவர் மற்றும் நகர மன்ற உறுப்பினர் த புவியரசி முன்னாள் இன்னர் வீல் சங்க தலைவர் கீதா லட்சுமி பொருளாளர் ஜெயந்தி ஜெகநாதன் ஆகியோர் வழங்கினார்கள்
இறுதியில் பேராசிரியர் கோ கோமதி நன்றி கூறினார்.
தமிழக குரல் செய்தியாளர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக