போதை இல்லா மாவட்டமாக உருவாக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் பல்வேறு நடவடிக்கைகள்! - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 5 ஏப்ரல், 2025

போதை இல்லா மாவட்டமாக உருவாக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் பல்வேறு நடவடிக்கைகள்!

போதை இல்லா மாவட்டமாக உருவாக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பல்வேறு நடவடிக்கைகள்! 

வேலூர், ஏப் 05 -

வேலூர் மாவட்டம் போதையில்லா மாவட்டமாக உருவாக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நா.மதிவாணன் அவர்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார் சட்டவிரோத மாக புகையிலை பொருட்கள் விற்பவர் கள் மற்றும் கடத்துபவர்களை தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இன்று 04.04.2025-ம் தேதி, அரியூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், வேலூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப் பாளர் பிரித்திவிராஜ் சவுகான் அவர்களின் வழிகாட்டுதலின்படி, பாகாயம் வட்ட காவல் ஆய்வாளர்  நாகராஜன், அரியூர் காவல் உதவி ஆய்வாளர் வீரம்மாள், மற்றும் தனிப்படை போலீசார், அரியூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஊசூர் பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு,    எதிரிகள் 1)நேமிசந்த் (வயது 31), த/பெ.தேவாராம், வேலூர், 2) பேராராம் (வயது40), த/பெ.பிமாராம், ராஜஸ்தான், 3)பயாஸ் (வயது36), த/பெ. ஜான் பாஷா, அணைக்கட்டு, 4) ரவிக்குமார் (வயது35), த/ பெ. வெங்கடேசன், அணைக்கட்டு என்பவர்கள் சட்டவிரோதமாக விற்பனைக்காக கடத்திக் கொண்டு வந்த சுமார் 133 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, எதிரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
 மேலும், இது போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக் கை எடுக்கப்படும் என்று, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்து ள்ளார் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொண்டார். 

வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad