ஆன்லைன் ரம்மி மற்றும் பங்கு சந்தையில் பணம் இழந்த வாலிபர் மன அழுத்தத்தால் தூக்கிட்டு தற்கொலை! - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

வியாழன், 3 ஏப்ரல், 2025

ஆன்லைன் ரம்மி மற்றும் பங்கு சந்தையில் பணம் இழந்த வாலிபர் மன அழுத்தத்தால் தூக்கிட்டு தற்கொலை!

ஆன்லைன் ரம்மி மற்றும் பங்கு சந்தையில் பணம் இழந்த வாலிபர் மன அழுத்தத்தால் தூக்கிட்டு தற்கொலை!

கே வி குப்பம், ஏப் 03 -

வேலூர் மாவட்டம் கீழ் வைத்தால் குப்பம் (கே .வி. குப்பம்) லத்தேரி பகுதியை சேர்ந்த காந்தி (வயது 38) ஆன்லைன் ரம்மி மற்றும் பங்குச்சந்தையில் ரூ. ஐம்பது லட்சத்திற்குமேல்  பணம் முதலீடு செய்து பணத்தை இழந்த வாலிபர் மன அழுத்தம் அதிகரித்து, விரக்தியில் தூக்கிட்டுதற்கொலை செய்துகொண்டார்
தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி, பங்குச் சந்தை மற்றும் பிட்காயின் கிரிப்டோ போன்றவற்றைகளில் தமிழக மக்கள் பெரிதும் பாதிப்பு அடைந்து வருகின்ற னர் மொபைல்களை இணைய வழி ஆஃப் பயன்படுத்தும் போது ஒருவராக தவிக்கின்றீர்களா ஆபாச வீடியோ கால் பன்னுங்கள் என ஆபாச வீடியோ ஆடியோ விளம்பரங்கள் இணையத்தில் கலாச்சார சீரழிவு அதிகரிப்பு மத்திய, மாநில அரசுகள் இது போன்ற செயல்களுக்கு முற்றிலும் தடை விதிக்க நடவடிக்கை எடுக்குமா என்ன பொதுமக்களும் மற்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கப் படுகின்றனர்

வேலூர் மாவட்டம், கீழ் வைத்தனாங்குப்பம் (கே.வி.குபபம்) தாலுகா, லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருவதாக தெரிவிக் கின்றனர். இந்நிலையில் வனிதாவின் கணவர் கார்த்தி என்பவர் பங்குச் சந்தையில் 50 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்து நஷ்டமான நிலையில் ஆன்லைன் ரம்மி என்ற சூதாட்ட விளையாட்டிலும் பணத்தை இழந்ததாக கூறப்படுகிறது. இதனால் உறவினர் களிடம் அதிக அளவு கடன் வாங்கியதின் காரணமாக மன அழுத்தம் ஏற்பட்ட, விரக்தியில் தற்கொலை செய்து கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 
மேலும், கார்த்தியின் உடலை கைப்பற்றி லத்தேரி காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த தற்கொலை சம்பவம் குறித்து லத்தேரி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி, பங்குச்சந்தை மற்றும் பிட்காயின் கிரிப்டோ போன்றவற்றைகளில் தமிழகத்தில்  இளைஞர்கள் வெவ்வேறு பகுதிகளில் பெரிதும் பாதிக்கப்பட்டு இளம் வயதில் பல உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றது. மொபைல் களை இணைய வழி ஆஃப் பயன் படுத்தும் போது ஒருவராக தவிக்கின் றீர்களா ஆபாச வீடியோ கால் பன்னுங்கள் என ஆபாச வீடியோ ஆடியோ விளம்பரங்கள் இணையத்தில் கலாச்சார சீரழிவு அதிகரிப்பு இதுகுறித்து மத்திய, மாநில அரசுகள் இது போன்ற செயல்களுக்கு முற்றிலும் தடை விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்களின் சார்பிலும் மற்றும் பொதுமக்களின் சார்பிலும்  வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.


வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ் 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad