தூத்துக்குடி வாழை சந்தைக்கு ஆத்தூர், அகரம், ஏரல், போன்ற இடங்களில் இருந்து வாழை இலை கட்டுக்கள் விற்பனைக்கு வருகின்றன. தற்போது வெயில் அடித்து வருவதால் வாழை இலைகள் வாடி வருகின்றன.
இதனால் விவசாயிகள் அதிக அளவில் வாழை இலைகளை விற்பனைக்கு கொண்டு வருவதால் வாழை இலைகள் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. ரூபாய் 5 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்டு வந்த 200 இலை கொண்ட கட்டு தற்பொழுது ரூ.1200 ஆக சரிவடைந்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக