திருவாரூர் மாவட்டம் அத்திக்கடை ஏப்ரல் 20-21 தினங்களில் மிகச்சிறப்பாக நடைபெற்ற அத்திக்கடை மக்கள் நல சங்கத்தின் சார்பில் மக்கள் குறை தீர்க்கும் நிகழ்ச்சியும் மக்களுக்கு குடி போதை அடிமையாகாமல் எப்படி எல்லாம் நம்மை பாதுகாத்துக் கொள்வது என்பதை மிகச் சிறப்பாக எடுத்துரைத்து மூன்றாம் ஆண்டு விழா மிக சிறப்பாக நடைபெற்றது.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக அத்திக்கடை ஜமாத்தை சார்ந்தவர்களும் . உள்ள அத்திக்கடை மக்கள் நல சங்கம் மூன்றாம் ஆண்டு விழா அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது இதில் பிளஸ் டூ மாணவ மாணவிகள் எந்த பாடத்திட்டத்தை தேர்ந்தெடுப்பது மது மற்றும் போதை பொருட்கள் பயன்படுத்தக்கூடாது உள்ளிட்ட விழிப்புணர்வு கருத்தரங்கம் ரமலான் மாதத்தில் வினா விடை போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
மேலும் பேரிடர் காலங்களில் சிறப்பாக பணியாற்றிய தூய்மை பணியாளர்கள் மின் ஊழியர்கள் காவல்துறையினர் ஆகியோரை பாராட்டி கேடயம் வழங்கி நினைவு பரிசு வழங்கினர் இதில் அத்திக்கடை முன்னாள் ஜமாத் தலைவர் ஆலங்குடி யார் அப்துல் முஹமத். அத்திக்கடை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஜாபர் சாதிக். கொரடாச்சேரி முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பாலச்சந்திரன் தொடக்கப்பள்ளி ஆசிரியர் மற்றும் மாநில தலைவர் ரவி அத்திக்கடை மக்கள் நல சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.
மேலும் இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக இருந்த அக்கு பஞ்சர் நிகழ்ச்சி க்கு நிதி உதவியை வழங்கிய சிங்கப்பூர் அத்திக்கடை கம்னியூட்டியனர்க்கும் .. ஊராட்சி மன்ற ஊழியர் களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கிய சிங்கப்பூர் வாழ் கே.எம். ஹாஜமைதீன் குடும்பத்தினருக்கும் மேலும் நிதி உதவியை வழங்கிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றி தெரிவித்து கொள்கிறது அத்திக்கடை மக்கள் நல சங்கம்.
இந்த சிறப்புமிக்க விழா வருடா வருடம் அத்திக்கடையில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது இந்த நிகழ்ச்சியில் நல்ல முறையில் ஒத்துழைப்பு தந்து மிகச் சிறப்பாக நடத்தி முடித்த அத்திக்கடை மக்கள் நல சங்கத்தின் நிர்வாகிகள் எல்லோரும் இணைந்து கொண்டாடிய திருவிழா ஏராளமான அத்திக்கடை வாழ் மக்களும் இளைஞர் பெருமக்கள் என்று ஏராளமாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி உரையாற்றி மிகச் சிறப்பாக நிகழ்ச்சி நிறைவு செய்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக