திருப்பத்தூர், ஏப்ரல் 8 —
ஸ்டுடென்ட்ஸ் பவர் ஆஃப் இந்தியன் அமைப்பின் சார்பில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி தாலுகாவின் திம்மாம்பேட்டை கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ திருப்பதி கெங்கையம்மன் திருக்கோயிலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாபெரும் இலவச மருத்துவ முகாம் மற்றும் கண் பரிசோதனை முகாம் நடைப்பெற்றது. இம்முகாமில் 250க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு சிகிச்சை மற்றும் பரிசோதனை வசதிகளைப் பெற்றனர்.
முகாமில் சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட ஊராட்சி மற்றும் திட்டக்குழு தலைவர் NKR. சூரியகுமார், சமூக ஆர்வலர் RR. வாசு, வாணியம்பாடி நகர மன்ற செயலாளர் V.S. சாரதி குமார் ஆகியோர் கலந்து கொண்டு முகாமை துவக்கி வைத்தனர். வசதியான இடவமைப்பும், மருத்துவர்களின் சிறந்த சேவையும் வழங்கப்பட்ட இந்த முகாம், கிராமப்புற மக்களுக்கு ஆரோக்கியத்தை கொண்டு சேர்க்கும் முக்கிய முயற்சியாக அமைந்தது. பொதுமக்கள் மனமுவந்து பாராட்டிய இந்த முகாம், எதிர்காலத்தில் மேலும் பல இடங்களில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக