சேலம் அரசு கலைக் கல்லூரி முன்பாக தேசிய சேவா சமிதி மற்றும் ஸ்டுடென்ட் பார் சேவா அமைப்பின் சார்பில் நீர்மோர் வழங்கும் நிகழ்ச்சி இன்று தொடங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு தேசிய சேவா சமிதி தலைவர் திரு. ஹரிஹரகோபால் அவர்கள் தலைமை வகித்தார். ஸ்டுடென்ட் பார் சேவா அமைப்பின் பொறுப்பாளர் பாலமுருகன் வரவேற்புரை ஆற்றினார்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக யோகி நாராயணா டிரஸ்ட் நிர்வாகி டாக்டர் ஜெயக்குமார் கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்தார். கல்வியாளர் பிரணவகுமார் முன்னிலை வகித்தார்.
அகில பாரதிய வித்யார்த்தி பர்ஷித் இயக்கத்தின் நிர்வாகிகள் ராமு, தீபக், அருண், பிரதீப், நவீன் உள்ளிட்ட பலரும் நிகழ்வில் கலந்து கொண்டனர். நிர்வாகிகள் தெரிவித்ததாவது, கோடை காலம் முழுவதும் அரசு கலைக் கல்லூரி முன்பாக மாணவ மாணவிகளுக்கு நீர்மோர் வழங்கப்படும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக