கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே உள்ள வீராட்டிகுப்பம் தேவாலய ஆலய பங்கிற்குட்பட்ட ஆர்.சி கோவிலாங்குப்பம் , முத்தனங்குப்பம்,ஆர்.சி கொக்காம்பாளையம், மட்டிகை, பாலக்கொல்லை உள்ளிட்ட ஆறு கிராமங்களை உள்ளடக்கிய கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு பரிகார பாதயாத்திரை மற்றும் சிலுவைப்பாதை நிகழ்வு நடைபெற்றது
வீராரெட்டிகுப்பம் பங்குத்தந்தை ஜான் சிரில் தலைமையில் நடைபெற்ற விழாவில் திரளான கிறிஸ்தவர்கள் சுமார் 10 கிலோ மீட்டர் நடைப்பயணம் மேற்கொண்டு பாதயாத்திரையாக சென்றனர், வீராரெட்டிகுப்பம் தேவாலயத்திலிருந்து இருந்து தொடங்கிய பேரணி முத்தனங்குப்பம் ,ஆலடி மணக்கொல்லை வழியாக சென்று இறுதியில் ஆர்.சி கோவிலாங்குப்பம் கிராமத்தில் நிறைவு பெற்றது.
இயோசு ச சிலுவையில் அறையப்பட்ட நிகழ்வை நினைவு கூறும் விதமாக ஸ்தளங்கள் அமைக்கப்பட்டு வழிபாடு மற்றும் ஜெபங்கள் மேற்கொள்ளப்பட்டது, இறுதியில் ஆர்.சி கோவிலாங்குப்பம் புனித சவேரியார் ஆலயத்தில் சிறப்பு திருப்பலியுடன் நிறைவு பெற்றது.
- விருத்தாச்சலம் செய்தியாளர் M. அலோசியஸ் தேவா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக