தூத்துக்குடி, ஜெயராஜ் சாலைப் பகுதியில் ரூ.94.54 இலட்சம் செலவில் பயனுறு சாலை அமைக்கும் பணி. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 11 ஏப்ரல், 2025

தூத்துக்குடி, ஜெயராஜ் சாலைப் பகுதியில் ரூ.94.54 இலட்சம் செலவில் பயனுறு சாலை அமைக்கும் பணி.


தூத்துக்குடி, ஜெயராஜ் சாலைப் பகுதியில் ரூ.94.54 இலட்சம் செலவில் பயனுறு சாலை அமைக்கும் பணியினை சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி.கீதாஜீவன் தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டம், தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஜெயராஜ் சாலைப் பகுதியில் இன்று(11.04.2025), மதுரை-தூத்துக்குடி சாலை கி.மீ132/6ல் தூத்துக்குடியில் சாலை மேம்பாலம் கட்டும் பணியில் தூத்துக்குடி பக்கம் மற்றும் ஜெயராஜ் சாலைப் பகுதியில் பயனுறு சாலை அமைக்கும் பணியினை சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி.கீதாஜீவன் தொடங்கி வைத்தார்.

மீளவிட்டான் தூத்துக்குடி இரயில் நிலையங்களுக்கு இடையே இரயில்வே கி.மீ 651/12-13 இருப்புப்பாதை கடவு எண்.485க்கு பதிலாக, மதுரை- தூத்துக்குடி சாலை கி.மீ132/6ல் தூத்துக்குடியில் சாலை மேம்பாலம் கட்டும் பணியில் தூத்துக்குடி பக்கம் மற்றும் ஜெயராஜ் சாலை பகுதியில் பயனுறு சாலை அமைக்கப்படவுள்ளது.

மேலும், மேம்பாலம் கட்டுமானப் பணியானது ரூ.20.27 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டில் உள்ளது. தற்போது, தூத்துக்குடி பக்கம் மற்றும் ஜெயராஜ் சாலைப் பகுதியில் 400 மீட்டர் நீளத்திற்கு ரூ.94.54 இலட்சம் செலவில் பயனுறு சாலை அமைப்பதற்கான பணிகளை சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி.கீதாஜீவன் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், திருநெல்வேலி கோட்டப்பொறியாளர்(திட்டங்கள்)லிங்கசாமி, தூத்துக்குடி உதவி கோட்டப் பொறியாளர்(திட்டங்கள்) உமாதேவி, இளநிலைப் பொறியாளர் அம்ஜெத்கான் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad