நீலகிரி மாவட்டம் ஒரு மிகச் சிறந்த சுற்றுலா தளமாகும் இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து கண்டு களித்து மிக்க மகிழ்ச்சியுடன் செல்வார்கள். இந்நிலையில் அடுத்த மாதம் கோடை சீசன் துவங்க உள்ள நிலையில் வைகிங் நிறுவனம் சார்பில் சுமார் 8 லட்சம் ரூபாய் மதிப்பில் நீலகிரி மாவட்ட போக்குவரத்து காவல்துறையினருக்கு நிழற்குடைகள் மற்றும் தடுப்புகள் வழங்கப்பட்டுள்ளன மழை மற்றும் வெயில் காலங்களில் போக்குவரத்து காவலர்கள் மற்றும் கோடை காலத்தில் நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சிறப்பு காவலர்கள் அமர்ந்து கண்காணிக்கவும் இந்த நிழற்குடைகள் உதவியாக இருக்கும். இந்த நிழற் குடைகள் தந்தன் மூலம் காவலர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இன்று காலை உதகை சேரிங் கிராஸ் பகுதியில் இந்த நிழற்குடைகளை வைக்கிங் நிறுவனம் சார்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முன்னிலையில் போக்குவரத்து காவல் துறையினருக்கு வழங்கப்பட்டது இந்த நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி என் எஸ் நிஷா இ கா ப அவர்கள் கலந்துகொண்டு போக்குவரத்து காவல்துறையினருக்கு வழங்கினார் இந்த நிகழ்வில் உதகை நகர காவல் துணை கண்காணிப்பாளர் நவீன் குமார், உதகை நகர மத்திய காவல் ஆய்வாளர் முரளிதரன் போக்குவரத்து காவல் ஆய்வாளர் வனிதா தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் சுஜாதா ஆயுதப்படை ஆய்வாளர் உதவி ஆய்வாளர்கள். போக்குவரத்து உதவி ஆய்வாளர் கள் காவலர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்..
மாவட்ட இனையதள செய்திகளுக்காக செய்தியாளர் செரீஃப்.M.A,.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக